திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே அமைந்துள்ள சிறுவாபுரி முருகன் கோவிலில், செவ்வாய்க்கிழமையை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். கூட்டம் அலைமோதியதால் சுமார் 4 மணி நேரம் வரை நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டது.