31
31

போலி செயலியை விற்று ரூ.8 கோடி வரை மோசடி செய்த நபர்.. சென்னையில் பதுங்கிய நபரை தட்டித் தூக்கிய போலீசார்

புதுச்சேரியில் போலி செயலியை விற்று 8 கோடி ரூபாய் வரை மோசடி செய்த நபரை சென்னையில் ஓ.எம்.ஆரில் போலீசார் கைது செய்தனர்.
Published on: 

புதுச்சேரியில் போலி செயலியை விற்று 8 கோடி ரூபாய் வரை மோசடி செய்த நபரை சென்னையில் ஓ.எம்.ஆரில் போலீசார் கைது செய்தனர்.

ஆன்லைன் டிரேடிங்கில் தானாக முதலீடு செய்து மாதம் 5 ஆயிரம் ரூபாய் வரை லாபம் பெற்று தரும் செயலி ஒன்று இருப்பதாகக் கூறி நபர் ஒருவர் செயலியை புதுச்சேரியில் 100க்கும் மேற்பட்டோரிடம் தலா 40 ஆயிரம் ரூபாய்க்கு விற்றுள்ளார்.

கட்டணம் செலுத்திய பின் அந்த செயலி செயலிழந்ததால், பாதிக்கப்பட்டோர் அளித்த புகரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் அந்நபர் சென்னை நீலாங்கரையை சேர்ந்த அஸ்வின் விக்னேஷ் என்பதும், நாடு முழுவதும் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரிடம் போலி செயலியை விற்று சுமார் ரூ.8 கோடி வரை மோசடி செய்தது தெரியவந்தது.

newstamil.tv