Kaatupaakm accident
மாவட்ட செய்திகள்
இருசக்கர வாகனத்தின் மீது மணல் லாரி மோதி விபத்து
பின்னால் வந்த லாரி மோதியது. இதில் அருந்ததி நிகழ்விடத்திலேயே உயிரிழந்த நிலையில் பர்கானா சிறு காயங்களுடன் உயிர் தப்பினார்.
திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லியை அடுத்த காட்டுப்பாக்கத்தில் கல்லூரி மாணவிகள் சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனத்தின் மீது மணல் லாரி மோதியதில் மாணவி நிகழ்விடத்திலேயே பலியானார். கல்லூரி மாணவிகளான அருந்ததி மற்றும் பர்கானா ஆகியோர் பருத்திப்பட்டு பகுதியில் உள்ள தனியார் கல்லூரிக்கு சென்று கொண்டிருந்தபோது, பின்னால் வந்த லாரி மோதியது. இதில் அருந்ததி நிகழ்விடத்திலேயே உயிரிழந்த நிலையில் பர்கானா சிறு காயங்களுடன் உயிர் தப்பினார்.
