Milkman escape
மாவட்ட செய்திகள்
திடீரென அறுந்து விழுந்த மின்சார கம்பி
தனது இருசக்கர வாகனத்தை அங்கயே விட்டுவிட்டு அருகில் இருந்த கடைக்கு ஓடி உயிர் தப்பினார்.
திண்டுக்கல் மாவட்டம் நெய்க்காரப்பட்டியில், இடியுடன் கூடிய கனமழை பெய்து கொண்டிருந்த பொழுது மின்சார கம்பி அறுந்து விழுந்ததில், நூலிழையில் உயிர்தப்பிய பால்காரரின் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. மழை நீருடன் கலந்த கழிவு நீர் தேங்கிய சாலையில், சென்று கொண்டிருந்தபோது பலத்த காற்று வீசியதால், தாழ்வாக சென்ற மின்சார வயர் அறுந்து சாலையின் கீழே விழுந்தது. சாலையில் சென்று கொண்டிருந்த பால்காரர் சுதாரித்த நிலையில், தனது இருசக்கர வாகனத்தை அங்கயே விட்டுவிட்டு அருகில் இருந்த கடைக்கு ஓடி உயிர் தப்பினார்.
