Vellore accident
Vellore accident

நெல் மூட்டைகள் ஏற்றிச் சென்ற வேன் டயர் வெடித்து கவிழ்ந்தது

நெல் மூட்டைகள் மீது அமர்ந்தபடி கொள்முதல் நிலையத்திற்கு சென்று கொண்டிருந்தபோது விபத்து ஏற்பட்டுள்ளது.
Published on: 

வேலூர் மாவட்டம் கருகம்பத்தூர் அருகே, நெல் மூட்டைகளை ஏற்றிச் சென்ற வேனின் பின்பக்க டயர் வெடித்து வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 4 பேர் காயம் அடைந்தனர். தட்டப்பாறை கிராமத்தை சேர்ந்த விவசாயி ஆறுமுகம் மற்றும் 3 கூலித் தொழிலாளிகள் நெல் மூட்டைகள் மீது அமர்ந்தபடி கொள்முதல் நிலையத்திற்கு சென்று கொண்டிருந்தபோது விபத்து ஏற்பட்டுள்ளது.

newstamil.tv