RMD Peanut
RMD Peanut

கமுதி அருகே சுமார் 300 ஏக்கர் நிலக்கடலை மகசூல் பாதிப்பு

உடைகுளம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 300 ஏக்கர் பரப்பளவில் நிலக்கடலை சாகுபடி செய்யப்பட்டது
Published on: 

இராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே மழை மற்றும் நோய் தாக்கம் காரணமாக நிலக்கடலை மகசூல் பாதித்துள்ளதால் வேளாண்துறை இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். முஷ்டக்குறிச்சி ஊராட்சிக்குட்பட்ட பெருமாள்குடும்பன்பட்டி, புதுப்பட்டி, உடைகுளம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 300 ஏக்கர் பரப்பளவில் நிலக்கடலை சாகுபடி செய்யப்பட்டது. பூக்கும் நேரத்தில் பெய்த தொடர் மழையால் இலைசுருட்டு, இலைப்புள்ளி, வேர் அழுகல் நோய்களால் விளைச்சல் பாதித்து ஏக்கருக்கு 30 ஆயிரம் முதல் 40 ஆயிரம் ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

newstamil.tv