வலங்கைமான்
வலங்கைமான்

உச்சி வெயிலில் வெடி மருந்துகளை கையாளும் போது விபத்து

இந்த வெடி விபத்தினால் தீ விபத்தினால் கட்டிடம் முழுவதும் சேதம் அடைந்துள்ளது.
Published on: 

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பகுதியில் உலக புகழ்பெற்ற வலங்கைமான் பாடை கட்டி மாரியம்மன் கோவில் அருகில் சிறு வெடி தயாரிக்கும் குடோன் ஒன்று உள்ளது இந்த குடோனில் ஐந்து நபர்கள் வெடி மருந்து பிரித்து வெடி தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வந்திருந்தார்கள்.

இந்த நிலையில் இன்று மதிய நேரத்தில் கடுமையான வெயில் அடித்து வந்த நிலையில் ராகுல் என்பவர் வெடி மருந்துகளை கையாளும் பொழுது அதிக அழுத்தத்தின் காரணமாகவும்
வெயில் காரணமாகவும் அங்கு தீ விபத்து ஏற்பட்டு வெடி விபத்து ஏற்பட்டு ராகுல் படுகாயம் அடைந்துள்ளார்.

மற்ற நால்வரும் பாதுகாப்பான முறையில் தப்பித்துள்ளார்கள் தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் உடனடியாக தீயை அணைத்து கற்றுக் கொண்டு வந்தார்கள் படுகாயம் அடைந்த ராகுலை தஞ்சாவூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளார்கள் இந்த வெடி விபத்தினால் தீ விபத்தினால் கட்டிடம் முழுவதும் சேதம் அடைந்துள்ளது.

இது குறித்து வலங்கைமான் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.

newstamil.tv