23
23

மணல் கொள்ளை புகார் மீது அலட்சியம் காட்டியதாக குற்றச்சாட்டு.. அம்பலூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம்

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே, மணல் கொள்ளை புகார் மீது விசாரணை நடத்தாமல் காலம் கடத்தியதற்காக, அம்பலூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் தற்காலிகமாக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
Published on: 

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே, மணல் கொள்ளை புகார் மீது விசாரணை நடத்தாமல் காலம் கடத்தியதற்காக, அம்பலூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் தற்காலிகமாக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

அம்பலூர் அருகே பாலாற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் கட்டுவதற்காக ஆற்றில் அள்ளப்பட்ட மணலை ஒப்பந்ததாரருடன் கூட்டுச் சேர்ந்து மணல் கொள்ளையர்கள் கடத்துவதாக, அம்பலூர் காவல் நிலையத்தில் கிராம நிர்வாக அலுவலர் பூபாலன் புகாரளித்துள்ள நிலையில், அதன் மீது நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தியதாக உதவி ஆய்வாளர் கண்ணன் மீது குற்றச்சாட்டு எழுந்தது.

இதையடுத்து, அம்பலூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் கண்ணனை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட கண்காணிப்பாளர் ஷ்ரேயா குப்தா உத்தரவிட்டுள்ளார்.

newstamil.tv