

சேலம் மாவட்டம் அரியானூர் அருகே மூதாட்டி வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக சிறுவனை போலீசார் கைது செய்தனர்.
கடந்த 27ஆம் தேதி சின்னத்தாயி என்ற மூதாட்டி மர்ம நபர்களால் தலையில் வெட்டி கொலை செய்யப்பட்டார். இதனை அடுத்து சிசிடிவி காட்சிகளை கொண்டு விசாரணை நடத்தி வந்த போலீசார் சம்பவம் தொடர்பாக 11 வகுப்பு படிக்கும் சிறுவன் மற்றும் கொலையை மறைக்க உடந்தையாக இருந்த அவரது தாய் கிருஷ்ணாப்பிரியாவையும் போலீசார் கைது செய்தனர்.
விசாரணையில் சின்னத்தாயி, வீட்டின் அருகே வசிக்கும் கிருஷ்ணப்பிரியாவின், 11 வகுப்பு படிக்கும் மகன் பள்ளிக்குச் செல்லாமல் சுற்றி திரிவதை கண்டித்ததால், ஆத்திரம் அடைந்த சிறுவன் மூதாட்டியை கத்தியால் வெட்டி கொலை செய்தது தெரியவந்தது.