Madurai
மாவட்ட செய்திகள்
கீழே தவறி விழுந்த பெண்ணை மருத்துவமனைக்கு அழைத்து சென்ற ஆட்டோ விபத்து... எதிரே வந்த கார் மீது மோதிய விபத்தில் பெண்ணுக்கு நடந்த சோகம்
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் ஆட்டோ மீது கார் நேருக்கு நேர் மோதிய பயங்கர விபத்தில் ஒரு பெண் பலியாகி ஐந்து பேர் படுகாயமடைந்தனர்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் ஆட்டோ மீது கார் நேருக்கு நேர் மோதிய பயங்கர விபத்தில் ஒரு பெண் பலியாகி ஐந்து பேர் படுகாயமடைந்தனர்.
அம்மட்டையன்பட்டியை சேர்ந்த வீரம்மாள் என்ற பெண் கீழே தவறி விழுந்து காயமடைந்ததால் அவரை உறவினர்கள் மருத்துவமனைக்கு ஆட்டோவில் அழைத்து சென்றபோது எதிரே வந்த கார் நேருக்கு நேர் மோதியது.
இதில் ஆட்டோவில் சென்றவர்கள் தூக்கி வீசப்பட்ட நிலையில், ஏற்கனவே காயமடைந்த அப்பெண் அந்த இடத்திலேயே பலியானார்.
இதில் காரின் முன்பகுதி சுக்குநூறான நிலையில் ஆட்டோவும் உருக்குலைந்தது.
விபத்தில் காயமடைந்த ஐந்து பேர் உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
