22
மாவட்ட செய்திகள்
இருசக்கர வாகனத்தின் மீது மோதி விட்டு சென்ற ஆட்டோ ஓட்டுநர்.. துரத்தி சென்று மடக்கி பிடித்த போக்குவரத்து உதவி ஆய்வாளர்
சென்னை திரு.வி.க. நகரில் இருசக்கர வாகனத்தின் மீது மோதிவிட்டு போக்குவரத்து காவலரிடம் தகராறில் ஈடுபட்ட ஆட்டோ ஓட்டுநர், அவரை தள்ளிவிட்டு தாக்க முயன்ற வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.
சென்னை திரு.வி.க. நகரில் இருசக்கர வாகனத்தின் மீது மோதிவிட்டு போக்குவரத்து காவலரிடம் தகராறில் ஈடுபட்ட ஆட்டோ ஓட்டுநர், அவரை தள்ளிவிட்டு தாக்க முயன்ற வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.
இருசக்கர வாகனத்தின் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற ஆட்டோவை போக்குவரத்து உதவி ஆய்வாளர் துரத்தி சென்று பிடித்தார். அப்போது குடிபோதையில் இருந்த ஓட்டுநர் உதவி ஆய்வாளரிடம் தகராறில் ஈடுபட்டு வாக்குவாதம் செய்தார்.
பின்னர் தாக்க முயன்ற நிலையில், போலீசார் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தகராறில் ஈடுபட்டது பெரம்பூர் பகுதியை சேர்ந்த அமர்நாத் என்பது தெரியவந்தது.

