kovi chezhiyan kalaignar university
மாவட்ட செய்திகள்
கும்பகோணத்தில் கலைஞர் பல்கலைக்கழகம் அரசு கலைக்கல்லூரி ஜூப்ளி விக்டோரியா விடுதி கட்டடம்..!
கும்பகோணம் அரசு கலைக்கல்லூரியின் ஜூப்ளி விக்டோரியா விடுதி கட்டடத்தில் கலைஞர் பல்கலைக்கழகம் தற்காலிகமாக செயல்படும் என அமைச்சர் கோவி செழியன் தெரிவித்துள்ளார்.
கும்பகோணம் அரசு கலைக்கல்லூரியின் ஜூப்ளி விக்டோரியா விடுதி கட்டடத்தில் கலைஞர் பல்கலைக்கழகம் தற்காலிகமாக செயல்படும் என அமைச்சர் கோவி செழியன் தெரிவித்துள்ளார்.
கலைஞர் பல்கலைக்கழகத்திற்கான இடத்தை தேர்வு செய்வது தொடர்பாக அரசு அதிகாரிகளுடன் ஆய்வு நடத்திய அவர், கள்ளப்புலியூர், மருதாநல்லூர் ஆகிய கிராமங்களில் உள்ள இடங்கள் பரிசீலனையில் உள்ளதாக கூறினார்.
அதில் தேர்வு செய்யப்படும் இடத்தில் கலைஞர் பல்கலைக்கழகம் கட்டப்படும் என்று கூறிய அமைச்சர், ஜூன் மாதம் கும்பகோணத்திற்கு வருகை தரும் முதல்வர், பல்கலைக்கழகத்திற்கு அடிக்கல் நாட்டுவார் என தெரிவித்தார்.
(ப்ரீத்)

