

தென்காசி மாவட்டம் இலஞ்சி அருகே 19 லட்ச ரூபாய்க்கு புதிதாக வாங்கிய வீட்டை தமமுக தலைவர் ஜான் பாண்டியன் உதவியுடன் நபர் அபகரிக்க முயற்சிப்பதோடு கொலை மிரட்டல் விடுப்பதாக வீட்டின் உரிமையாளர் வேதனை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், வாஞ்சிநகர் பகுதியில் உள்ள அந்த வீட்டில் வசித்து வந்த தனது பாட்டியை கடந்த வாரம் கூலிப்படையினரை ஏவி வெளியேற்றியதாக உரிமையாளர் நிவன் மேத்யூ தெரிவித்தார்.