

தென்காசி மாவட்டத்திற்கு விடுக்கப்பட்ட ஆரஞ்சு அலார்ட் எச்சரிக்கை காரணமாக குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் குளிக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
அதிக கனமழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்ட நிலையில், தொடர்ந்து சாரல் மழை பெய்து வருவதால் குற்றாலத்தில் உள்ள மெயின் அருவி, ஐந்தருவி, புலி அருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்படுகிறது.
இந்நிலையில் காவல்துறையினர் அருவி கரையோரம் பேரிகார்டுகள் அமைத்து சுற்றுலா பயணிகள் வருகையை கண்காணிக்கின்றனர்.