36
36

மினி மதுபானக்கடையாக செயல்படும் பெட்டிக்கடை... காவல் நிலையம் அருகில் இருந்தும் அச்சமின்றி மதுவிற்பனை

மதுரை விக்கிரமங்கலம் காவல் நிலையம் அருகே உள்ள பெட்டிக்கடையில், கள்ளத்தனமாக மதுவிற்பனை செய்யப்படும் வீடியோ வெளியாகியுள்ளது.
Published on: 

மதுரை விக்கிரமங்கலம் காவல் நிலையம் அருகே உள்ள பெட்டிக்கடையில், கள்ளத்தனமாக மதுவிற்பனை செய்யப்படும் வீடியோ வெளியாகியுள்ளது.

விக்கிரமங்கலம் அருகே அரசு மதுபான கடை தனியார் பார் வசதியுடன் செயல்பட்டு வரும் நிலையில், காவல்நிலையம் அருகே உள்ள இந்த பெட்டிக்கடையில் அதிகாலை முதலே கூடுதல் விலைக்கு மதுபானம் விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது.

அருகில் காவல் நிலையம் இருந்தும் சிறிதும் அச்சமின்றி கள்ளச்சந்தையில் மது விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

newstamil.tv