New Project - 2025-05-28T181423
மாவட்ட செய்திகள்
இலங்கைத் தமிழர் வீட்டின் கதவை உடைத்து கொள்ளை... பீரோவிலிருந்த 15 பவுன் நகை, ரூ.30 ஆயிரம் கொள்ளை
திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே இலங்கைத் தமிழர் வீட்டின் கதவை உடைத்து பீரோவிலிருந்த 15 பவுன் தங்க நகை மற்றும் 30 ஆயிரம் ரூபாயை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை, போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

இலங்கைத் தமிழரான மேகலா குடும்பத்துடன் வேளாங்கண்ணி கோவிலுக்கு சென்றுவிட்டு மீண்டும் வீடு திரும்பிய போது, கதவு உடைக்கப்பட்டு நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டது தெரிய வந்தது.
இதனிடையே கொள்ளை நடந்த வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆட்டோவில் முக்காடு அணிந்த இருவர் கொள்ளை அடிக்க முயன்றது, அதில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது.
அதே நபர்கள் தான் வீட்டிலும் கொள்ளையடித்தார்களா என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.