கோவை மாவட்டம் வால்பாறையில் வில்லோணி எஸ்டேட் பகுதியில் உள்ள தேயிலை காட்டிற்குள் ஒரு வயதுள்ள பெண் புலிக்குட்டி மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தது. தகவலறிந்து வந்த வனத்துறையினர் இறந்த புலிக்குட்டியின் உடலை மீட்டு உயிரிழப்புக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.