முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மருத்துவமனையில் அனுமதி..

உடல்நலக் குறைவு காரணமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வழக்கமான நடைபயிற்சி மேற்கொண்ட முதலமைச்சருக்கு லேசான தலை சுற்றல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
35
35
Published on: 

உடல்நலக் குறைவு காரணமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வழக்கமான நடைபயிற்சி மேற்கொண்ட முதலமைச்சருக்கு லேசான தலை சுற்றல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக மருத்துவமனை நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக முதலமைச்சருக்கு சில மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொள்வதற்காகவே அவர் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

newstamil.tv