

சென்னை திருவொற்றியூரில் திருவள்ளுவர் கோயில் கட்டுமான பணியை பார்வையிட்ட அமைச்சர் சேகர்பாபு, அங்கு பணி எதுவும் நடைபெறாததை கண்டித்து தொடர்புடைய அதிகாரியை வீடியோ காலில் அழைத்து கண்டித்தார். சாலை விரிவாக்கப் பணிக்காக 10 ஆண்டுகளுக்கு முன் இடிக்கப்பட்ட கோயிலை கட்டுவதற்கு 2023ஆம் ஆண்டு இந்து சமய அறநிலையத்துறை ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கியது. இந்நிலையில் அங்கு திடீர் ஆய்வு செய்த அமைச்சரிடம், செல்போனில் பேசிய அதிகாரி பணி நடப்பதாக தெரிவித்த நிலையில், நான் அங்குதான் இருக்கிறேன் பணி நடப்பதற்கான அறிகுறியே இல்லையே என கண்டித்த அமைச்சர், உடனடியாக வேலையை தொடங்கி போட்டோ எடுத்து அனுப்புமாறு கூறினார்.