

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக நூற்றுக்கும் மேற்பட்ட ஏக்கரில் பயிரிடப்பட்ட சோளம் பயிர்கள் சேதமடைந்துள்ளது.
கபிஸ்தலம்,கூனஞ்சேரி, புள்ளபூதங்குடி, ஆதனூர், திருமண்டங்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 50-ஆண்டுகளுக்குப் பிறகு முதன்முதலாக மாற்று பயிராக விவசாயிகள் சோளம் பயிரிட்டிருந்தனர்.
இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக பெய்த கனமழை காரணமாக நோய் தாக்கி பயிர்கள் சேதமடைந்துள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
மேலும் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.