TUT Reels
மாவட்ட செய்திகள்
திருச்செந்தூர் முருகன் கோவில் வளாகத்தில் நடனமாடி ரீல்ஸ்
நேற்று வெள்ளிக்கிழமை அன்று ஆறு பேர் கொண்ட குழு புற காவல் நிலையம் அருகே நடனமாடி ரீல்ஸ் பதிவிட்டுள்ளனர்.
திருச்செந்தூர் முருகன் கோவில் வளாகத்தில் தடையை மீறி சினிமா பாடலுக்கு குழு நடனமாடி ரீல்ஸ் எடுத்து இன்ஸ்டாவில் பதிவிட்ட இளைஞர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர். கோவில் வளாகத்தில் ரீல்ஸ் எடுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கைப் பலகை வைத்து நான்கு நாட்கள் மட்டுமே ஆன நிலையில், நேற்று வெள்ளிக்கிழமை அன்று ஆறு பேர் கொண்ட குழு புற காவல் நிலையம் அருகே நடனமாடி ரீல்ஸ் பதிவிட்டுள்ளனர். இது சமூக வலைதளங்களில் பரவிய நிலையில், காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர்.
