NMK HRNC Issue
NMK HRNC Issue

திருச்செங்கோடு அருகே கோயில் வழிபாட்டில் தகராறு

குமாரமங்கலத்தில் உள்ள பொன் காளியம்மன் கோயிலில் வழிபடுவது தொடர்பான வழக்கு
Published on: 

திருச்செங்கோடு அருகே குமாரமங்கலத்தில் உள்ள பொன் காளியம்மன் கோயிலில் வழிபடுவது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் உள்ளபோதே, ஒரு சமூகத்தினர் சட்டவிரோதமாக கோயிலின் மதில் சுவரை இடித்ததாக மற்றொரு சமூகத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தனர். பொன்காளியம்மன் குடிபாட்டு சமூகத்தினர், கோயில் வழிபாடுகளை செய்து வந்த நிலையில், திடீரென மற்றொரு சமூகத்தினர் தங்களுக்கும் உரிமை உண்டு எனக் கூறி கோயிலை புனரமைக்க முயற்சிப்பதாக கூறப்படுகிறது.

newstamil.tv