Mdu water issue
Mdu water issue

ராட்சத குழாயில் உடைப்பு ஏற்பட்டதால் குடிநீர் வீண்

சுமார் 8 மணி நேரத்திற்கு மேல் பல லட்சக்கணக்கான லிட்டர் குடிநீர் வீணாக வெளியேறியது.
Published on: 

மதுரை மாவட்டம் அனுப்பானடி சோனையா கோவில் தெரு பகுதியில் ராட்சத குழாயில் உடைப்பு ஏற்பட்டு பீறிட்டுக்கொண்டு நீர் வெளியேறியது. பாதாள சாக்கடையை சீரமைக்கும் பணியை நள்ளிரவில் மாநகராட்சி பணியாளர்கள் ஜேசிபி இயந்திரம் மூலம் மேற்கொண்டபோது, ராட்சத குழாயில் உடைப்பு ஏற்பட்டது.

சுமார் 8 மணி நேரத்திற்கு மேல் பல லட்சக்கணக்கான லிட்டர் குடிநீர் வீணாக வெளியேறியது. இதனால் சாலைகளில் நீர் தேங்கி நின்றதால் குடியிருப்புவாசிகள் அவதியடைந்தனர்.

newstamil.tv