Ramanathapuram
Ramanathapuram

சுனாமி குடியிருப்பில் உள்ள வீட்டிற்கு ரூ.68,000 மின்கட்டணம்... 15 நாட்களுக்குள் ரூ.35,860 செலுத்த வேண்டும் என நோட்டீஸ்

ராமநாதபுரம் மாவட்டம் வேதாளையில் சுனாமி குடியிருப்பு வீட்டிற்கு 68 ஆயிரம் ரூபாய் மின் கட்டணம் செலுத்த வேண்டும் என மின்வாரியம் நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக மீன்பிடி தொழிலாளி வேதனை தெரிவித்துள்ளார்.
Published on: 

ராமநாதபுரம் மாவட்டம் வேதாளையில் சுனாமி குடியிருப்பு வீட்டிற்கு 68 ஆயிரம் ரூபாய் மின் கட்டணம் செலுத்த வேண்டும் என மின்வாரியம் நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக மீன்பிடி தொழிலாளி வேதனை தெரிவித்துள்ளார்.

வழக்கமாக 500 முதல் 600 ரூபாய் வரை மின்கட்டணம் செலுத்தி வந்ததாக தெரிவித்த சேக் ஜமாலுதீன், கடந்த 10 நாட்களுக்கு முன் 37 அயிரத்து 800 ரூபாய் மின்கட்டணம் வந்ததாக கூறியுள்ளார்.

தற்போது 68 ஆயிரம் ரூபாய்க்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு, முதல் தவணையாக 35,860 ரூபாயை 15 நாட்களுக்குள் செலுத்த வேண்டும் என மின்வாரியம் தெரிவித்துள்ளதாக ஜமாலுதீன் கூறினார்.

newstamil.tv