8
மாவட்ட செய்திகள்
"2026 தேர்தலில் எனக்குக்கூட சீட் இல்லாமல் போகலாம்".. அமைச்சர் பொன்முடி பேச்சால் கூட்டத்தில் பரபரப்பு
வரும் சட்டமன்றத் தேர்தலில் தனக்குக் கூட சீட் இல்லாமல் போகலாம் என அமைச்சர் பொன்முடி கூறியதால் பாக முகவர்கள் கூட்டத்தில் பரபரப்பு நிலவியது.
வரும் சட்டமன்றத் தேர்தலில் தனக்குக் கூட சீட் இல்லாமல் போகலாம் என அமைச்சர் பொன்முடி கூறியதால் பாக முகவர்கள் கூட்டத்தில் பரபரப்பு நிலவியது.
விழுப்புரம், விக்கிரவாண்டி, வானூர், திருக்கோவிலூர் ஆகிய 4 சட்டமன்றத் தொகுதிகளுக்கான பாக முகவர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய அவர், 2026 சட்டமன்றத் தேர்தலில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 7 தொகுதிகளில் மட்டுமல்ல 234 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றிபெறும் வகையில் பணியாற்ற வேண்டும் என்றார்.

