23
மாவட்ட செய்திகள்
கால்வாய்களை மூடி கல்குவாரிக்கு பாதை அமைத்த உரிமையாளர்.. பாதை அமைக்கும் பணிகளை தடுத்து நிறுத்திய விவசாயிகள்.. மீண்டும் நீர்வரத்து கால்வாயை ஏற்படுத்திய பொதுமக்கள்
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே அரசு விதிகளை மீறி ஏரி வரத்து கால்வாய்களை மூடி கல்குவாரிக்கான பாதை அமைத்ததை கண்டித்து அப்பகுதி விவசாயிகள் மீண்டும் நீர்வரத்து கால்வாயை ஏற்படுத்தினர்.
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே அரசு விதிகளை மீறி ஏரி வரத்து கால்வாய்களை மூடி கல்குவாரிக்கான பாதை அமைத்ததை கண்டித்து அப்பகுதி விவசாயிகள் மீண்டும் நீர்வரத்து கால்வாயை ஏற்படுத்தினர்.
மாம்புதூர் பகுதியில் உள்ள சித்தேரியில் சென்னையைச் சேர்ந்த நபருக்கு சொந்தமான இடத்தில் கல்குவாரி அமைக்க அனுமதி அளிக்கப்பட்ட நிலையில் அதன் உரிமையாளர் அங்குள்ள சமூக காடுகள், ஏரி நீர் தாங்கல் உள்ளிட்ட பாதைகளை மறித்து கல்குவாரிக்கு பாதை அமைத்துள்ளார்.
இது தொடர்பான மக்களின் மனு குறித்து உரிமையாளருக்கு நீதிமன்றம் எச்சரிக்கை வித்துள்ள நிலையில் மீண்டும் பணியை தொடங்கியதால் பொதுமக்கள் அங்கு சென்று
பணியில் ஈடுபட்டவர்களுக்கு எடுத்துரைத்து பணியை நிறுத்தினர்.

