Thiruvarur
மாவட்ட செய்திகள்
நெற்பயிர்கள் தண்ணீர் இன்றி கருகுவதால் விவசாயிகள் கவலை... முறையான பாசன வசதி இல்லாததால் நீர் வரவில்லை
திருவாரூர் அருகே குறுவை நெற்பயிர்கள் தண்ணீர் இன்றி கருகி வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
திருவாரூர் அருகே குறுவை நெற்பயிர்கள் தண்ணீர் இன்றி கருகி வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டுவெள்ளையாற்றில் தண்ணீர் சென்றாலும்,
கூத்தாநல்லூர் வட்டத்துக்கு உட்பட்ட நாகராஜன் கோட்டகம் கிராமத்தில் முறையான பாசன வசதி இல்லததால் நீர் வரவில்லை என தெரிகிறது.
இதனால் சுமார் 100 ஏக்கர் பரபரப்பளவில் குறுவை சாகுபடி செய்த விவசாயிகள், தண்ணீரின்றி பயிர்கள் நாசமாகியுள்ளதாக வேதனை தெரிவித்துள்ளனர்.
எனவே நாகராஜன் கோட்டகம் கிராமத்திற்கு தண்ணீர் கிடைப்பதற்கு மாவட்ட நிர்வாகம் வழிவகை செய்ய வேண்டுமென அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
