பள்ளியின் முன்பு முன்னாள் மாணவர்கள் அட்ராசிட்டி... பட்டாசை பற்றவைத்து பள்ளிக்குள் வீசி எறிந்து அராஜகம்

தேனி அருகே தனியார் பள்ளியின் முன்பு முன்னாள் மாணவர்கள் அட்ராசிட்டியில் ஈடுபட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
Theni
Theni
Published on: 

தேனி அருகே தனியார் பள்ளியின் முன்பு முன்னாள் மாணவர்கள் அட்ராசிட்டியில் ஈடுபட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

முத்துதேவன்பட்டியில் உள்ள நாடார் சரஸ்வதி மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளியின் முன்பு திரண்ட 10-க்கும் மேற்பட்ட மாணவர்கள்,

தாங்கள் கொண்டு வந்த பட்டாசை பற்றி வைத்து பள்ளிக்குள் வீசினர்.

மேலும், ஆபாசமாக வார்த்தைகளால் பேசியும், திட்டியும் அராஜகத்தில் ஈடுபட்டவர்கள்,

ஒரு கட்டத்தில் தாங்கள் அணிந்திருந்த செருப்புகளையும் கழற்றி பள்ளிக்குள் வீசினர்.

இதுகுறித்து விசாரித்தபோது, அதே பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் என்பதும்,

டிசி வாங்க சென்றபோது அராஜகத்தில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

newstamil.tv