

சேலம் மாவட்டம் ஓமலூரில் 5 போலி நிறுவனங்களை நடத்தி சுமார் 20 கோடி ரூபாய் மோசடி செய்த நிறுவனத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஈரோட்டை சேர்ந்த பரமேஸ்வரன், பூமிநாய்கன்பட்டி வெங்கட்ராமன், தோளூர் விஜய் என்கிற நஞ்சப்பன், சுரேந்தர் ஆகியோர் சேர்ந்து, சேலம் பாகல்பட்டி ஊராட்சி செட்டியார்கடை என்கிற இடத்தில் கடந்த 2023-ம் ஆண்டு ரிலாக்ஸ் பைனான்ஸ்,
ஆர் மார்ட், ரிலாக்ஸ் பே டிஜிட்டல் பேங்க், ரிலாக்ஸ் எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் லேண்ட் புரமோட்டர்ஸ் ஆகிய 5 போலியான நிதி நிறுவனங்களை தொடங்கி மோசடி செய்ததாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.