32
மாவட்ட செய்திகள்
மக்கள் கூடும் நிகழ்வுகளுக்கு சுகாதார வழிமுறைகள் அறிவிப்பு.. பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வ விநாயகம் அறிவுறுத்தல்
கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், பொது இடங்களில் கூடும் போது மக்கள் பின்பற்ற வேண்டிய சுகாதார வழிமுறைகள் குறித்து தமிழக அரசின் பொது சுகாதாரத்துறை சில அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.
கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், பொது இடங்களில் கூடும் போது மக்கள் பின்பற்ற வேண்டிய சுகாதார வழிமுறைகள் குறித்து தமிழக அரசின் பொது சுகாதாரத்துறை சில அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.
மதக் கூட்டங்கள், சமூக மற்றும் கலாச்சார நிகழ்வுகள், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் மற்றும் அரசியல் பொதுக்கூட்டங்களில், பாதுகாப்பான குடிநீர், கழிப்பறைகள், கழிவுகளை அகற்றுவதற்கான ஏற்பாடுகள் உட்பட போதுமான சுகாதார வசதிகள் செய்யப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்யுமாறு, அனைத்து மாவட்ட சுகாதார அலுவலர்களுக்கும் பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வ விநாயகம் அறிவுறுத்தியுள்ளார்.

