85
85

மானாமதுரை சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை.. ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கொட்டித்தீர்த்த மழை

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக இடி மின்னலுடன் கனமழை பெய்தது.
Published on: 

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக இடி மின்னலுடன் கனமழை பெய்தது.

தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்த நிலையில், மானாமதுரை சிப்காட், ராஜகம்பீரம், மூங்கில் ஊரணி, பழைய பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் இடி மின்னலுடன் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை கொட்டித் தீர்த்தது.

கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்த நிலையில், தற்போது பெய்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

newstamil.tv