

தேனி மாவட்டத்தில் உள்ள சுருளி அருவியில் காற்றாற்று வெள்ளம் காரணமாக சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
உத்தமபாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.
இதனால் சுருளி அருவியில் காற்றாற்று வெள்ளம் ஏற்பட்டு அருவியில் நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
எனவே பொதுமக்களின் பாதுகாப்பு நலன் கருதி அருவிக்கு செல்ல வேண்டாம் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.