CGL Heavy traffic
மாவட்ட செய்திகள்
ஜிஎஸ்டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்
தாம்பரம் ஜீரோ பாயிண்ட் இல் இருந்து இரணியம்மன் கோயில் வரை மூன்று கிலோமீட்டர் தொலைவிற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன
சென்னை தாம்பரம் அருகே கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் பயணிகள் அவதியடைந்தனர். நேற்று மாலை மிதமான மழை பெய்த நிலையில் பெருங்களத்தூர் மேம்பாலத்தில் கனரக டிப்பர் லாரியும், ஜிஎஸ்டி சாலையில் மினி வேன் ஒன்றும் பழுதானதால் தாம்பரம் ஜீரோ பாயிண்ட் இல் இருந்து இரணியம்மன் கோயில் வரை மூன்று கிலோமீட்டர் தொலைவிற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன
