KNC Councellor door
மாவட்ட செய்திகள்
ஒன்றிய கவுன்சிலர் கூட்டத்தில் செய்தியாளர்கள் வெளியேற்றம்
கூட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே திமுக ஒன்றிய குழு தலைவர் கருணாநிதி செய்தியாளர்களை வெளியே அனுப்பினார்.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடைபெற்ற ஒன்றிய கவுன்சிலர் கூட்டத்தில் செய்தியாளர்களை வெளியே அனுப்பி உள்ளே தாழ்ப்பாள் போட்டதால் அதிகாரிகள் கூட்டத்தில் பங்கேற்காமல் திரும்பி சென்றனர். கூட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே திமுக ஒன்றிய குழு தலைவர் கருணாநிதி செய்தியாளர்களை வெளியே அனுப்பினார். பின்னர் கதவை பூட்டியதால் கூட்டத்திற்கு வந்த அதிகாரிகள் திரும்பி சென்றனர்.
