1
1

கருப்பண்ணசுவாமி திருக்கோயில் சித்திரை திருவிழா... மழை வேண்டி முளைப்பாரி எடுத்து வழிபாடு

மதுரை மாவட்டம் மேலூர் அருகே வெள்ளலூர் மந்தை கருப்பண்ணசுவாமி திருக்கோயிலில், சித்திரை மாத திருவிழாவையொட்டி 100க்கும் மேற்பட்ட பெண் பக்தர்கள் முளைப்பாரியை சுமந்து ஊர்வலமாக சென்று சாமி தரிசனம் செய்தனர்.
Published on: 

மதுரை மாவட்டம் மேலூர் அருகே வெள்ளலூர் மந்தை கருப்பண்ணசுவாமி திருக்கோயிலில், சித்திரை மாத திருவிழாவையொட்டி 100க்கும் மேற்பட்ட பெண் பக்தர்கள் முளைப்பாரியை சுமந்து ஊர்வலமாக சென்று சாமி தரிசனம் செய்தனர்.

கோடை வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில், மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டி ஏராளமான பெண் பக்தர்கள் வழிபட்டனர்.

இதனை தொடர்ந்து, அருகில் உள்ள சித்தன்உடைப்பு கண்மாய் நீரில் முளைப்பாரியை கரைத்து அம்மனை தரிசித்தனர்.

newstamil.tv