

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த கொள்ளிடம் புலீஸ்வரி அம்மன் கோயில் உண்டியலை உடைத்து பணத்தை கொள்ளையடித்து சென்ற மூன்று பேரை போலீசார் சிசிடிவி காட்சியின் அடிப்படையில் கைது செய்தனர். கடந்த நவம்பர் மாதம் பத்தாம் தேதி அதிகாலையில் கோயிலுக்குள் புகுந்த மூன்று நபர்கள் பஉண்டியலை உடைத்து பணத்தை திருடிச் சென்றனர். புகாரின் அடிப்படையில் காரைக்காலை சேர்ந்த 19 வயது இளைஞர் வெற்றி மற்றும் இரண்டு சிறார்களை கைது செய்த போலீசார் விசாரணை மேற்கொண்ட போது, கடந்த 3 மாதங்களில் பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் உண்டியலை உடைத்து திருடியது தெரியவந்தது.