Cbe chain snaching
Cbe chain snaching

வீட்டில் தனியாக இருந்த முதிய தம்பதியிடம் செயின் பறிப்பு இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் துணிகரம்..!

வீட்டில் தனியாக இருந்த முதிய தம்பதியிடம் பைக்கில் வந்த மர்ம நபர்கள், குடிக்க தண்ணீர் கேட்பது போல நடித்து மூதாட்டியின் கழுத்தில் கிடந்த 3 சவரன் நகையை பறித்து சென்ற சம்பவம்
Published on: 

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே, வீட்டில் தனியாக இருந்த முதிய தம்பதியிடம் பைக்கில் வந்த மர்ம நபர்கள், குடிக்க தண்ணீர் கேட்பது போல நடித்து மூதாட்டியின் கழுத்தில் கிடந்த 3 சவரன் நகையை பறித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆச்சிபெட்டி போஸ்டல் காலனியை சேர்ந்த 80 வயதான காளிதாஸ், அவரது 72 வயதான மனைவி சாந்தகுமாரியுடன் வீட்டில் தனியாக இருந்த போது, இந்த செயின் பறிப்பு சம்பவம் நடந்துள்ளது.

newstamil.tv