பிரபல கொள்ளையன் திருச்சியில் சுட்டு பிடிப்பு

உதவி ஆய்வாளர் பாஸ்கர் மற்றும் போலீஸாரை அவன் கத்தியால் தாக்கிவிட்டு தப்பியோடிய போது, கால் மற்றும் விலா பகுதியில் போலீஸார் சுட்டுப் பிடித்தனர்.
TRY Gunshot
TRY Gunshot
Published on: 

கோவையில் கொள்ளை வழக்கில் தேடப்பட்டு வந்த பிரபல கொள்ளையனை போலீஸார் திருச்சியில் சுட்டுப் பிடித்தனர். போத்தனூர் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட இடத்தில் நடந்த கொள்ளை வழக்கில் தொடர்புடைய திண்டுக்கல்லை சேர்ந்த பிரபல கொள்ளையன் ராஜசேகரை, கடந்த பல மாதங்களாக போலீஸார் தேடி வந்தனர். அவன், திருச்சி எடமலைப்பட்டிபுதூர் அருகே உள்ள ராமச்சந்திரா நகரில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்ததை அறிந்து வந்த போலீஸார், அவனது வீட்டை சுற்றி வளைத்து பிடிக்க முயன்றனர். அப்போது, உதவி ஆய்வாளர் பாஸ்கர் மற்றும் போலீஸாரை அவன் கத்தியால் தாக்கிவிட்டு தப்பியோடிய போது, கால் மற்றும் விலா பகுதியில் போலீஸார் சுட்டுப் பிடித்தனர்.

newstamil.tv