54
54

பட்டணம் பள்ளத்து கருப்பணார் கோவில் திருவிழா விமரிசை... 10,000க்கும் மேற்பட்ட ஆடுகளை பலியிட்டு நேர்த்திக்கடன்

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே பட்டணம் பள்ளத்து கருப்பணார் கோவில் திருவிழாவில், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆடுகளை பலி கொடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
Published on: 

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே பட்டணம் பள்ளத்து கருப்பணார் கோவில் திருவிழாவில், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆடுகளை பலி கொடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

திறந்த வெளியில் காட்சி தரும் பள்ளத்து கருப்பணார் சுவாமிக்கு 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை சித்திரை இரண்டாவது புதன்கிழமையில் நடைபெறும் திருவிழா, நடப்பாண்டு சிறப்பாக நடைபெற்றது.

அப்போது ஆயிரக்கணக்கான பெண்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர்.

மலர்களால் அலங்கரிக்கப்பட்டு காட்சியளித்த சுவாமிக்கு பல தானிய பூஜை, பொங்கல் பூஜை மற்றும் பலா பூஜை நடத்தப்பட்டது.

newstamil.tv