14
14

புதையலில் கிடைத்ததாக கூறி போலி தங்ககாசு விற்பனை.. ஆறு பேர் மோசடி கும்பலை கைது செய்த போலீசார்

திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் புதையலில் கிடைத்ததாக கூறி போலி தங்க காசுகளை விற்பனை செய்ய முயன்ற ஆறு பேரை போலீசார் கைது செய்தனர்.
Published on: 

திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் புதையலில் கிடைத்ததாக கூறி போலி தங்க காசுகளை விற்பனை செய்ய முயன்ற ஆறு பேரை போலீசார் கைது செய்தனர்.

விழுப்புரம் மாவட்டம் அம்மன் குப்பம் பகுதியைச் சேர்ந்த தர்மலிங்கம் என்பவர் முறையாறு பகுதியில் இரண்டரை கிலோ போலி தங்க நகையை விற்பனை செய்ய உள்ளதாக, கிடைத்த தகவலின் பேரில் போலீசார் தர்மலிங்கம் மற்றும் அவனது கும்பலை கைது செய்து அவர்களிடமிருந்த காரையும் பறிமுதல் செய்தனர்.

விசாரணையில் தர்மலிங்கம் தனது நிலத்தில் கிணறு வெட்டியபோது புதையல் கிடைத்ததாகவும் அதில் 400 கிராம் தங்க காசுகள் இருந்ததாகவும் கூறி போலி தங்க காசுகளை விற்க முயன்றது அம்பலமானது.

newstamil.tv