17
17

தனியார் தங்கும் விடுதியில் போலீஸார் அதிரடி சோதனை.. ரூ.33 லட்சம் பறிமுதல்: லால்குடி இளைஞர்கள் 2 பேர் கைது

திருச்சி மாநகர போலீஸார் தனியார் விடுதியில் நடத்திய சோதனையில் 33 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டதோடு, 2 இளைஞர்களும் கைது செய்யப்பட்டனர்.
Published on: 

திருச்சி மாநகர போலீஸார் தனியார் விடுதியில் நடத்திய சோதனையில் 33 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டதோடு, 2 இளைஞர்களும் கைது செய்யப்பட்டனர்.

மாநகரில் கஞ்சா புழக்கத்தை தடுக்கும் வகையில், உறையூர் பகுதியில் உள்ள தனியார் தங்கும் விடுதிகள், திருமண மண்டபங்களில் போலீஸார் சோதனையில் ஈடுபட்டனர்.

திருத்தாந்தோணிரோடு பகுதியில் உள்ள ஜி.கே. என்கிற விடுதியில் சோதனை செய்தபோது லால்குடியை சேர்ந்த பிரபு, கிருஷ்ணன் ஆகியோர் தங்கி இருந்த அறையில் இருந்த 33 லட்சம் ரூபாய்க்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் பணத்தை பறிமுதல் செய்த போலீஸார். அதனை வருமான வரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

newstamil.tv