TVM Fire accident
TVM Fire accident

பூஜை பொருட்கள், கற்பூர கடையில் பயங்கர தீவிபத்து

3 தீயணைப்பு வாகனங்கள் மற்றும் 2 தனியார் டேங்கர் லாரிகளை பயன்படுத்தி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
Published on: 

திருவண்ணாமலை காமாட்சி அம்மன் கோவில் தெருவில் உள்ள பூஜை பொருட்கள் மற்றும் கற்பூர வியாபாரக் கடையில் ஏற்பட்ட பயங்கர தீயை, தீயணைப்பு வீரர்கள் போராடி அணைத்தனர்.
கற்பூர கடை என்பதால் தீ மளமளவென பரவி, அருகிலுள்ள 2 கடைகளிலும் தீப்பற்றியது. இதையடுத்து, 3 தீயணைப்பு வாகனங்கள் மற்றும் 2 தனியார் டேங்கர் லாரிகளை பயன்படுத்தி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். எனினும், கடையில் இருந்த பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள், ரொக்க பணம் மற்றும் 7 டூவீலர்கள் எரிந்து சாம்பலாகின.

newstamil.tv