madurai
மாவட்ட செய்திகள்
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் பிரசாதங்கள் விலை உயர்வு
மீனாட்சி அம்மன் கோயிலில் விற்பனை செய்யப்படும் பிரசாதங்களின் விலை, 50 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் விற்பனை செய்யப்படும் பிரசாதங்களின் விலை, 50 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. மூலப்பொருட்களின் விலையேற்றம் காரணமாக, விலை உயர்த்தப்பட்டுள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. கடந்த 15 ஆண்டுகளாக 10 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த சர்க்கரை பொங்கல், புளியோதரை, வடை, அப்பம், முறுக்கு, லட்டு ஆகியவை 15 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 21 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட மஞ்சள் பை விலை ஐந்து ரூபாய் குறைந்துள்ள நிலையில், எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல் விலை உயர்த்தப்பட்டுள்ளதாக பக்தர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
