

திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அருகே நூறு நாள் வேலை திட்டத்தில் இருந்து மகாத்மா காந்தியின் பெயர் நீக்கப்பட்டதை கண்டித்து இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். பெயரை முதலில் மாற்றி பிறகு திட்டத்தையே சிதைக்கும் வேலையில் மத்திய பாஜக அரசு ஈடுபடுவதாக குற்றம் சாட்டப்பட்டது.