Kodaikanal tourist crowd
Kodaikanal tourist crowd

நீலகிரி மாவட்டத்தில் ரெட் அலர்ட் எதிரொலி கொடைக்கானலுக்கு படையெடுத்த சுற்றுலா பயணிகள்..!

நீலகிரி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டதன் எதிரொலியாக, கொடைக்கானலை நோக்கி சுற்றுலா பயணிகள் படையெடுத்துள்ளனர்.
Published on: 

நீலகிரி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டதன் எதிரொலியாக, கொடைக்கானலை நோக்கி சுற்றுலா பயணிகள் படையெடுத்துள்ளனர்.

ஒரு பக்கம் சாரல் மழை, மறுபக்கம் இதமான காற்று வீசுவதால் சுற்றுலா பயணிகள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

கொடைக்கானலில் 62-ஆவது கோடை விழா மற்றும் மலர்க் கண்காட்சி நடைபெற்று வரும் நிலையில், பிரையண்ட் பூங்காவில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.

நட்சத்திர ஏரியில் சாரல் மழையில் நனைந்தபடி படகு சவாரி செய்தும், ஏரிச்சாலையை சுற்றி குதிரை சவாரி, சைக்கிள் சவாரி மேற்கொண்டும் சுற்றுலா பயணிகள் பொழுது கழித்தனர்.

newstamil.tv