cm
cm

தூய்மைப் பணியாளர்களுக்கு உணவு வழங்கும் திட்டம் தொடக்கம்

சென்னை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கு 3 வேளை இலவச உணவு வழங்கும் திட்டம்.
Published on: 

சென்னை மாநகராட்சி சார்பில், தூய்மைப் பணியாளர்களுக்கு மூன்று வேளை இலவச உணவு வழங்கும் திட்டத்தை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். உணவை எடுத்துச் செல்லும் வாகனங்களையும் முதலமைச்சர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். 31 ஆயிரத்து 373 பணியாளர்கள் பயனடையும் வகையில் செயல்படுத்தப்படும் இத்திட்டத்திற்கு 186 கோடியே 94 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. திட்டத்தை தொடங்கி வைத்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆரோக்கிய வாழ்விற்கு அடிப்படையாக உள்ள தூய்மை பணி என்பது ஒரு சேவை எனவும், தூய்மைப் பணியாளர்களின் சுயமரியாதையை காக்கவே, உணவு வழங்கும் திட்டம் துவக்கப்பட்டதாகவும் பேசி உள்ளார். இதையும் பாருங்கள் - CM Speech | ஆரோக்கிய வாழ்விற்கு அடிப்படை தூய்மை, முதல்வர் பேச்சு | Sanitary Workers| Chennai

newstamil.tv