TVL TTN
TVL TTN

டிட்வா புயல் எதிரொலியாக பள்ளி, கல்லூரிகளுக்கு லீவு

அங்கன்வாடி மையங்களுக்கு முறையாக சுற்றறிக்கை அனுப்பவில்லை எனக் கூறப்படுகிறது.
Published on: 

திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், உத்தரவை மீறி திருத்தணியில் அங்கன்வாடி மையங்கள் செயல்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. டிட்வா புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்ட ஆட்சியர் விடுமுறை அறிவித்திருந்தார். ஆனால், திருத்தணி குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் அங்கன்வாடி மையங்களுக்கு முறையாக சுற்றறிக்கை அனுப்பவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால், வழக்கம்போல அங்கன்வாடியை திறந்து குழந்தைகளை வரவழைத்து பாடம் நடத்தியதாக தெரிவித்தனர்.

newstamil.tv