chennai
மாவட்ட செய்திகள்
எஸ்.ஐ.ஆர். படிவத்தால் 21 ஆண்டுகளுக்கு பிறகு சிக்கிய கொலையாளி
மதம் மாறி பெங்களூரில் தலைமறைவாக வசித்து வந்த கொலையாளி
கொலை சம்பவத்தில் தலைமறைவாக இருந்து வந்த நபர், 21 ஆண்டுகளுக்கு பிறகு, சென்னை எண்ணூரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியின் போது, போலீஸாரிடம் சிக்கினார். எண்ணூரில், பாலியல் தொழில் செய்து வந்த போது, வாடிக்கையாளர் ஒருவரை கொலை செய்து விட்டு ராஜேந்திரன் என்பவர் தலைமறைவானார். இவரை பிடிக்க பல்வேறு இடங்களில் போலீஸார் தேடி வந்தனர். இந்த நிலையில், எஸ்.ஐ.ஆர். படிவம் தொடர்பான விசாரணையின் போது, ராஜேந்திரன் மதம் மாறி, பெங்களூரில் வசித்து வந்தது தெரிய வந்தது.
