13
மாவட்ட செய்திகள்
சமூக ஆர்வலர் ஜகபர் அலி கொலை வழக்கு.. கைது செய்யப்பட்ட 5 பேரில் 3 பேர் மீது குண்டாஸ்..சிபிசிஐடி பரிந்துரையில் மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை
சமூக ஆர்வலர் ஜகபர் அலி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட மூன்று பேர் மீது குண்டாஸ் பாய்ந்தது. கனிம வளக்கொள்ளையை வெளிக்கொணர முயன்றதால் சமூக ஆர்வலர் ஜகபர் அலி லாரி ஏற்றி கொல்லப்பட்டார்.
சமூக ஆர்வலர் ஜகபர் அலி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட மூன்று பேர் மீது குண்டாஸ் பாய்ந்தது. கனிம வளக்கொள்ளையை வெளிக்கொணர முயன்றதால் சமூக ஆர்வலர் ஜகபர் அலி லாரி ஏற்றி கொல்லப்பட்டார்.
இது தொடர்பாக கல்குவாரி உரிமையாளர்களான ராசு, ராமையா, தினேஷ் குமார், லாரி உரிமையாளர் முருகானந்தம், லாரி ஓட்டுநர் காசிநாதன் ஆகிய ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில், கைது செய்யப்பட்ட கல்குவாரி உரிமையாளர்களான ராசு, ராமையா மற்றும் மினி லாரி உரிமையாளர் முருகானந்தம் ஆகிய மூவரையும் குண்டர் சட்டத்தில் சிறையிலடைக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

