

திருநள்ளாறு சனீஸ்வர பகவான் ஆலயத்தில் விதிகளைமீறி கட்டணம் பெற்று சிறப்பு தரிசனத்திற்காக பக்தர்களை அழைத்து சென்ற ஆலய ஊழியர்கள் உள்ளிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டனர். புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட போலீசார், ஆலய ஊழியர்கள் இருவர் மற்றும் தனியார் ஆலய வழிகாட்டிகள் 2 பேரை அழைத்துச் சென்றனர். இதனைக் கண்டித்து, 50-க்கும் மேற்பட்ட ஆலய ஊழியர்கள் பணி புறக்கணிப்பில் ஈடுபட்ட நிலையில் 8 பேரையும் எச்சரிக்கை செய்து போலீசார் விடுவித்தனர்..